யாழ்ப்பாணம் புலோலியை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வங்கியாளர் திரு.வ.சிவச்சந்திரதேவன் அவர்கள் இன்று (23.05.2020) காலமானார்.
வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் நிறுவனரான இவர் 1985 களில் அதனை உருவாக்கி உடுப்பிட்டி மற்றும் சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள இளையோர்களுக்கு தட்டச்சினை தொழில்முறையாக சொல்லிக் கொடுத்து அதன் மூலம் பலர் இன்று நீதிமன்றங்களிலும், வங்கிகளிலும், கச்சேரிகளிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் தொழில் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
பண்டகைப்பிள்ளையார் ஆலயத்திற்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி சமயப் பணிகளிலும் உதவிகள் புரிந்து வந்துள்ளார்.
சமூக சேவையாளரான இவர் தனது கிராமம் தொடர்பிலும் இறுதிவரை அக்கறையுடன் செயற்பட்டு வந்தவர்.
அவரது திடீர் மறைவு குடும்பத்தினரை மட்டுமல்ல ஊரவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரண அறிவித்தல் - திரு வயிரவிப்பிள்ளை சிவச்சந்திரதேவன் - ஓய்வுபெற்ற வங்கியாளர், வடமராட்சி சுருக்கெழுத்துக் கழக ஸ்தாபகர்
யாழ்ப்பாணம் புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வ.சிவச்சந்திரதேவன் (ஓய்வுபெற்ற வங்கியாளர், வடமராட்சி சுருக்கெழுத்துக் கழக ஸ்தாபகரும்) இன்று (23.05.2020) காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா வயிரவிப்பிள்ளை, வயிரவிப்பிள்ளை அன்னம்மாள் ஆகியோரின் அன்புப்புதல்வனும் காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை பாலசிங்கம், பாலசிங்கம் கமலினி ஆகியோருடைய அன்பு மருமகனும், கிருஷ்ணகுமாரியின் பாசமிகு கணவரும் சஜிஷ்ணவன், சுஹநிதன், சைந்தவி, அபீஷ்டகன் ஆகியோரின் நேசத்திற்குரிய தந்தையும் காலஞ்சென்றவர்களான கோப்பெருந்தேவி, சிவசூரியதேவன் மற்றும் சிவ அக்கினிதேவன், சிவசிம்மதேவன், செம்மனச்செல்வி, மெல்லியல் ஆகியோரின் அன்புச் சகோதரரும் கிருஷ்ணானந்தம், கிருஷ்ணகுமார், கமலகுமார், கலைவாணி, மதிவதனி, உமா ஆகியோரின் மைத்துனரும் அருந்தவராணி, மனோரஞ்சனி, மாலினி, விபுலானந்தம், காலஞ்சென்ற புஷ்பகுமார, சூரியகுமார் ஆகியோரின் சகலரும்
சமாஹிதன், தர்ஜனிஹிதன், ஹம்சப்பிரியா, இராகவி ஆகியோரின் மாமனாரும் இபவக்ஷ, வத்ஷாங்ஹிதன், சுபான்யன், பாகேஷன், ரிஷாபன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இன்றும், நாளையும் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, நாளை (24.05.2020) பிற்பகல் 2 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பூதவுடல் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
0 Comments