உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் திரு சி.கிருஸ்ணகுமார் அவர்களின் மணிவிழா நிகழ்வு இன்று கல்லூரியின் சிதம்பரப்பிள்ளை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி நலன்புரிச்சங்கத் தலைவர் திரு கே.தர்மதேவன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில், விழா நாயகன் உடுப்பிட்டி சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேடபூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மாணவர்களின் பாண்ட் வாத்திய இசை சகிதம் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. மங்கள விளக்கினை வித்தியாலய பிரதி அதிபர் திரு விஜயகுமார், வடமராட்சி வலய ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர்களான திரு சி.புஸ்பலிங்கம், திரு யோ.ரவீந்திரன் ஆகியோரும் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர்களான திரு க.தர்மலிங்கம் , திரு என்.அனந்தராஜ் , திரு கி.நடராசா உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து ஆசியுரைகளை வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தண்டபாணி தேசிகர், தென்னிந்திய திருச்சபை பங்குத்தந்தை செ.துரைரத்தினம் ஆகியோரும் வரவேற்புரையை கல்லூரி ஆசிரியர் திருமதி து.வாகீசனும் வாழ்த்துரைகளை கல்லூரி பிரதி அதிபர் திரு த.விஜயகுமார் ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளர்கள் கரவெட்டிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு கே. யோகநாதன் உட்பட பலரும் நிகழ்த்தினர்.
தொடர்ந்து விழா நாயகனை கௌரவிக்கும் முகமாக கிருஸ்ண வசந்தம் என்னும் நூல் வெளியிடப்பட்டது. நூலின் வெளியீட்டுரையை ஆர்.தேவகி நிழ்த்தினார். தொடர்ந்து கிருஸ்ண வசந்தம் நூலை பழைய மாணவனும் ஓய்வு நிலைக்கல்விப்பணிப்பாளர் திரு யோ.ரவீந்திரன் வெளியிட்டு வைக்க விழா நாயகனின் தாயார் திருமதி சுப்பிரமணியம் கிருஸ்ணாம்பாள் பெற்றுக்கொண்டார்.
0 Comments