உடுப்பிட்டியில் இளைஞர் உயிரிழப்பு

 


வடமராட்சி உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி பகுதியில் கடந்த 2006 ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் அடிக்கடி சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இளைஞர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்

சம்பவத்தில் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 22 வயதான இராமச்சந்திரன் தனுசன் என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Post a Comment

0 Comments