உடுப்பிட்டியில் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பம் இன்று
நாட்டில் தற்போது வேகமாக அதிகரித்துவரும் கொரோனா நோய்க்கான தடுப்பூசியினை இதுவரை பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இறுதித்தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 08.30 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை உடுப்பிட்டி இலகடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறவிருக்கின்றது.
எனவே இதுவரை தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளாதவர்கள் இவ் இறுதி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெற்றுக் கொள்ளத் தவறும் சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகவல் - கிராம அலுவலர்.
0 Comments