யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் புத்தூர் சொக்கன்திடல் கிராம மக்களுக்கு உடுப்பிட்டி தெற்கு சொர்ண ஞானவைரவர் ஆலயத்தின் ஏற்பாட்டில் 02.12.2024 மதிய உணவு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தை வீரவாணி கிராம மக்களுக்கு 02.12.2024 இரவு சமைத்த உணவு வழங்கப்பட்டது.
மழை ஓய்ந்து நான்கு நாட்களாகியும் இன்னமும் வெள்ளநீர் வடியாத நிலை உள்ளது. வீரவாணி கிராமத்தின் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதுடன் காணிகளுக்குள்ளும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
உணவு சமைக்கும் ஏற்பாடுகளிலும், சமைத்த உணவுகளை மக்களுக்கு கொண்டு சென்று வழங்கும் பணிகளிலும் முன்னாள் வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரான தியாகராஜா நிரோஷ் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து பங்கேற்றிருந்தனர்.
ஏற்கனவே கடந்த 28 ஆம் திகதி வாதரவத்தை அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு கிராமத்துக்கு சொர்ண ஞான வைரவர் ஆலயத்தினர் சமைத்த உணவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments