"மரம் நடுவோம் பசுமை பேணுவோம்" எனும் தொனிப்பொருளில் உடுப்பிட்டி தெற்கில் முதற் கட்டமாக இரண்டு கிராம அலுவலகர்கள் பிரிவிற்கு உட்பட மக்களுக்கு உடுப்பிட்டி நலன்புரிச்சங்கத்தின் ஊடாக 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இலவசமாக 500 தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன.
ஒரு குடும்பத்திற்கு ஐந்து தென்னங் கன்றுகள் வீதம் வழங்கப்பட்டன. அவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். உடுப்பிட்டி நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், கிராம அலுவலர்கள், பொதுமக்கள் விநியோகத்தின் போது கலந்துகொண்டனர்.
0 Comments