இவர், தன் வாழ்நாளில், 24 ஆண்டுகளில், 20 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடவு செய்து, பராமரித்து வளர்த்துள்ளார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், இயற்கையை பாதுகாப்பதை முக்கிய பணியாக கொண்டு செயல்பட்டார். எப்போதும், பச்சை நிற சட்டையும், வேட்டியும் அணிந்து, எப்போதும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடுவதையே மேற்கொண்டார்.
கல்லூர் பாலன் குறித்து வெளியான ஆவணப்படம்
இவர், தரிசாக கிடந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை, நீண்ட கால முயற்சியால் மரக்காடாக மாற்றி, வனத்தில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை அமைத்தும், பழங்களை உணவாக வழங்கியும் முன்மாதிரியான செயல்பட்டு மக்கள் மனதை ஈர்த்தவர்.
பல்வேறு அமைப்புகள் சார்பில், பல சுற்றுச்சூழல் விருது பெற்றுள்ளார். இவரது மரக்கன்று நடும் பணிக்காக, தனியார் நிறுவனம் இலவச வாகனம் வழங்கியுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்தவர், மண்ணுக்குள் விதையானார் என, சுற்றுச்சூழல் ஆர்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
0 Comments