பம்பஸ் (Baby Napkin) பாவனையாளர்களுக்கான தகவல் சேகரிப்புப் படிவம் - கரவெட்டி பிரதேச சபை

 


பயன்படுத்தப்பட்ட பம்பஸ்களை உரியவாறு அகற்றுவதற்கான வசதியின்மையால் பம்பஸ் பயன்பாட்டாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

 எனவே இவற்றை வடமராட்சி தெற்கு மேற்கு பிர தேசசபையினால் சிறு கட்டணம் பெற்று  சேகரித்து உரியவாறு பரிகரிப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது, எமது ஆளுகைப் பிரதேசத்திலுள்ள  பம்பஸ் பாவனையாளர்களின் தகவல்கள் இல்லாதிருப்பதனால் செயற்படு திட்டம் ஒன்றைத் தயாரிப்பது சிரமமாக உள்ளது. 

எனவே தங்களினால் வழங்கப்படுகின்ற தகவல்களைக் கொண்டு நேர்த்தியான திட்டம் ஒன்றினைத் தயாரிக்கவுள்ளோம். வீதிகளில் வீசப்படுகின்ற பம்பஸ்களை இல்லாது ஒழிப்பதற்கு (பூச்சிய நிலை) பொது மக்களாகிய உங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தங்களின்  பரிபூரணமான ஒத்துழைப்புக்களை வேண்டிநிற்கின்றோம்.

தங்களிடமிருந்து தகவல்களை 2025.04.10ம் திகதிக்கு முன்னராக கணிசமான அளவு தகவல்கள் கிடைக்கப்பெறுமிடத்து எமது திட்டங்களை தயாரித்து 2025.04.15ம் திகதியிலிருந்து இத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்பதனை தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.

முக்கிய குறிப்பு : ஒவ்வொரு பயனாளருக்கும் ஒவ்வொரு தனிப்படிவம் பூரணப்படுத்த வேண்டும்.

கணேசன் கம்ஸநாதன், செயலாளர், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை

குறித்த இணைய விண்ணப்ப படிவத்தை நிரப்ப இங்கே கிளிக் செய்யவும்

பம்பஸ் தகவல் சேகரிப்பு இணையப் படிவத்தை நிரப்பும் இணைப்பை பெற கீழேயுள்ள QR Code ஐ கைபேசியால் ஸ்கான் செய்யவும் 



சுற்றுச் சூழல் பற்றி சிந்தனையின்றி பொறுப்பற்ற சிலர் தெருக்களில் அதனை போடுவதனால் நாய்கள் இழுத்து தெரு முழுவதும் அசுத்தம் செய்வதுடன் அயல் வீடுகளுக்கும் இழுத்துச் செல்வதால் பல்வேறு சமுதாயப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 




Post a Comment

0 Comments