தொண்டைமனாறு சித்த மருத்துவ மையத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிறுதானிய விழா

 

புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள  தொண்டைமனாறு சித்த மருத்துவ மையத்தில் சிறுதானிய விழா  18.03.2025 செவ்வாய்க்கிழமை அன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. 


சித்த மருத்துவத்துறையினரின் முழுமையான பங்களிப்போடு இடம்பெற்ற இந்நிகழ்வைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 


இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள இளையோரால் தொடங்கப்பட்ட காரைநகரை தளமாக கொண்டியங்கும் பல்லுயிர் நிறுவனத்தினர் குறித்த நிகழ்வில் வழங்கிய சிறுதானிய சத்துமா விழாவில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 


எமது முன்னோரின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகித்த சிறுதானிய உணவுகள் பொதுவாகவே இயற்கை உணவின் உண்மையான சுவையோடு இருக்கும். அத்தோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த தேர்வாக சிறுதானியங்கள் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 



நம் உணவில் மாற்றம் கொண்டால், வாழ்வில் மாற்றம் வரும்!











Post a Comment

0 Comments