நெல்லியடி முச்சக்கர வண்டி கூட்டுறவு சங்கத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவு 16.03.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கரவெட்டி பிரதேசசபையின் மண்டபத்தில் இடம்பெற்றது.
கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் க. கம்சநாதன் மற்றும் கூட்டுறவுச் சங்க உத்தியோகத்தர்களான அ.தயாளன், சி.சிறீதரன் முன்னிலையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் நெல்லியடி நகரப்பகுதி முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
புதிய நிர்வாகத்தில் தலைவராக இராசன் விஜிதரனும், செயலாளராக சிவபாலசிங்கம் ஆர்த்திகனும், பொருளாளராக சிவராசா புஸ்பராசா, உபதலைவராக மாயவன் மகேஸ்வரனும், உபசெயலாளராக இந்திரன் நிறோஜனும் தெரிவு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
0 Comments