கரவெட்டியின் தனித்துவமான கோவிற்சந்தை திறப்புவிழா அழைப்பிதழ்

 


பிரதேச மக்கள் மற்றும் பிரதேச சபையின் கூட்டு நிதிப் பங்களிப்புடன் முன்னுதாரணமான அபிவிருத்தி திட்டமாக இது நோக்கப்படுகிறது.

கரவெட்டியின் அடையாளமாக மாலை நேரத்தில் தொடங்கி இரவு வரை அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் அன்று நடைபெற்ற இச்சந்தையானது இனிவரும் காலங்களில் நவீன வசதிகளுடன் முழுநேர சந்தையாக இயங்கவுள்ளது.
கரவெட்டி பிரதேச சபையும், கோவிற்சந்தை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கமும் அப்பகுதி மக்களுடன் இணைந்து இப்பாரிய வேலைத் திட்டத்தினை முன்னெடுத்து நிறைவேற்றி இருக்கிறார்கள்.
--------------------------------------------------------------------
திறப்புவிழா விபரம் -
யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையும், கோவிற்சந்தை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கமும், கரவெட்டி மக்களும் இணைந்த நிதிப் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட கோவிற்சந்தை மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செல்லத்துரை பிரணவநாதன், வடமாகாண உள்ளூராட்சி திணைக்கள உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி.தேவந்தினி பாபு, வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நடராஜா திருலிங்கநாதன், கரவெட்டி பிரதேச செயலாளர் திருமதி.உமாமகள் மணிவண்ணன், யாழ் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பொன்னம்பலம் சிறிவர்ணன், கரவெட்டி சுகாதார வைத்திய பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.பிருந்திகா செந்தூரன் மற்றும் கெளரவ விருந்தினர்களாக கோவிற்சந்தை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க தலைவர் சட்டத்தரணி கந்தசாமி மகிந்தன், கோவிற்சந்தை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஆலோசகர் சிவராமலிங்கம் சரவணகுமரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
கரவெட்டியின் அடையாளமாக விளங்கும் மாலை நேர சந்தையாக அறியப்பட்ட கோவிற்சந்தை மக்களின் பங்கேற்புடன் மீண்டும் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் முழுநேர சந்தையாக இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Post a Comment

0 Comments