உடுப்பிட்டி தெற்கு இளந்தளிர் முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டுவிழா 29.03.2025 சனிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு வீரபத்திரர் ஆலயம் அருகிலுள்ள உடுப்பிட்டி நலன்புரிச்சங்க மைதானத்தில் ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக உடுப்பிட்டி சைவப்பிரகாச வைத்தியசாலையின் அதிபர் திரு என். சுதாகர் அவர்களும், கௌரவ விருந்தினராக வடமராட்சி கல்வி வலயத்தின் முன்பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளரான திருமதி எஸ். சுதாஜினிதேவி அவர்களும் சிறப்பு விருந்தினராக உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத் தலைவர் திரு. எஸ். சிவரஞ்சன், விருந்தினர்களாக அரசியல் செயற்பாட்டாளரான திரு. தியாகராஜா நிரோஷ், இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கும் சமூக செயற்பாட்டாளர் திரு. ஜெகநாதன் ஐயா, கிராமசேவையாளர் திரு.எஸ் சுசீந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மழலைகளின் விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற விநோத உடைப்போட்டி உள்ளிட்ட கண்ணைக்கவரும் பல்வேறு நிகழ்வுகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்நிகழ்வை இளந்தளிர் முன்பள்ளியின் நிர்வாகத்தினர் ஒருங்கிணைத்து இருந்ததோடு அதற்கு தாயகம், கனடா, லண்டன் உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தினர், இளைஞர்கள், ஊர்மக்கள் என அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு சிறப்புற அமையவேண்டும் என்கிற நல்ல நோக்கில் நேரகாலம் பாராது, விடுமுறையின்றி சிறப்பாகவும், திறம்படவும் தொடர்ச்சியாக மாணவர்களை பயிற்றுவித்த இளந்தளிர் முன்பள்ளியின் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர் குழாம் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.
0 Comments