உடுப்பிட்டி பண்டகையை பிறப்பிடமாகவும் மயிலிட்டி தெற்கு கட்டுவன், உடுப்பிட்டி தெற்கு 15 ஆம் கட்டையடியில் வசித்தவரும் தற்போது கனடாவின் ரொறன்ரோவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி இராஜநாகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்கள் 06.03.2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் ஐயா (இருபாலை), இரத்தினம்மா (உடுப்பிட்டி) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிறீபாலசுப்பிரமணியம் ஐயாவின் (கோபால்) அன்புச் சகோதரியும்,
அமரர் விஜயசுந்தரத்தின் (கட்டுவன்) அன்பு மனைவியும், சோதிலிங்கத்தின் சிறிய தாயாரும்,
அமரர் விஜயகுமார், விஜயபாலன் (ஜேர்மனி), விஜயராஜன் (கனடா), பத்மநாதன் (பிரான்ஸ்), குகேந்திரன் (நோர்வே), வேதமூர்த்தி (கனடா), சேகரன் - பாபு (ஓய்வுநிலை உத்தியோகத்தர் - பிரதேச சபை கரவெட்டி), மனோகரன் (வாசு - இலங்கை) , திரிபுரசுந்தரி - விஜி (ஆசிரியர் - வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 13-03-2025 அன்று கனடாவில் 38 HFinLey ave Ajax L1 S2 E3 என்னும் முகவரியில் அமைந்துள்ள மயானத்தில் 11 மணிக்கு (கனடா நேரம்) தகனம் செய்யப்படுகிறது.
பிற்குறிப்பு - அன்னாரின் அஞ்சலி நிகழ்வுகள் 15 ஆம் கட்டையடி உடுப்பிட்டி தெற்கில் அமைந்துள்ள மனோகரன் - வாசு (மகன்) இல்லத்தில் நடைபெறும்.
குடும்பத்தினர் -
தகவல்,
சேகரன் விஜயசுந்தரம்
0 Comments