நேற்று நள்ளிரவு முதல் 31.03.2025 நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) பெட்ரோலின் விலையைக் குறைத்துள்ளது.
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.
அதேபோல், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.
ஆனால் ஏனைய எரிபொருட்களை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
அதன்படி, லங்கா வெள்ளை டீசல் 286.00 ரூபாவுக்கும் , சூப்பர் டீசல் 331.00 ரூபாவுக்கும் மற்றும் மண்ணெண்ணெய் 183 ரூபாவுக்கும் என்ற அதே விலையில் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த முறை மாதாந்திர எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் புதிய விலை 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 168 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அதன் புதிய விலை 1,645 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
0 Comments